யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார்.

அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய போது இது காணாது சற்று அதிகமாக தாருங்கள் என 500 ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார்.

பின்னர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர் வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்.

யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு! | Jaffna Crime Robbery Jaffna Police

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.