மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை; திடீர் உத்தரவு பிறப்பித்த ரணில்!
மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் உடன் நடைமுறையாகும் வகையில் குறித்த உத்தரவை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.
நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் திடீரென உயிரிழப்பதன் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அதிபரால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை