யானை – மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு; அடுத்த ஆண்டு அரசு ரூ. 1,200 மில்லியன் ஒதுக்கீடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அடுத்த வருடம் 1200 மில்லியன் ரூபா செலவில் யானை மனித மோதலுக்கான நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் குருநாகலில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் தெரிவித்தார்.
காட்டு யானைகளின் வாழ்விடத்திற்காக நாடு முழுவதும் அதிக வன காப்பகங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு தீவனம் வழங்கப்படும்.அடுத்த ஆண்டு 10,000 ஹெக்டேர் நிலம் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்
மனித யானை மோதலால் இந்த வருடத்தில் இதுவரை 395 காட்டு யானைகளும் 127 பேரும் உயிரிழந்துள்ளனர். அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 72 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 344 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 133 பேர் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை