அவசரமான தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி பெறக்கூடிய கட்சி
அவசரமான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் கிடைக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 சதவீத வாக்குகளை பெறும் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நேருக்கு நேரான போட்டி ஏற்படும் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்ட பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை