20 ஆயிரம் கோடி ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்துள்ள மக்கள்
நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் மக்கள் தமது தங்க ஆபரணங்களை இவ்வாறு அடகு வைத்துள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய வகுப்பை சேர்ந்த மக்களே அதிகளவில் தமது தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 13 அனுமதிப்பெற்ற வணிக வங்கிகள், 10 நகை அடகு பிடிக்கும் நிறுவனங்களிடம் 193 பில்லியன் ரூபா அதாவது 19 ஆயிரத்து 300 கோடி ரூபாவுக்கு மக்கள் தமது தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.
தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக மக்கள் இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மக்கள் அனுமதிப்பெற்ற நிறுவனங்களிடம் மாத்திரமல்லாது பணத்தை அதிகமாக வழங்கும் நிறுவனங்களிடமும் தமது தங்க ஆபரணங்களை அடகு வைத்து வருவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை