கப்பம் பெறுவதற்காககடத்திச் சென்ற சந்தேகநபர் காத்தான்குடி பகுதியில் கைது..
கப்பம் பெறுவதற்காக ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரியமை தொடர்பில் காத்தான்குடி காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் உந்துருளியுடன் கடத்தலை மேற்கொண்ட 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர் .
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை