பேராதனை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்மற்றும் அவரது மகன் தாக்குதல்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் அவரது மகன் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

 

 

மாணவர்களால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் அவரது மகன்..! | Student Attack Vice Chancellor Peradeniya Campus

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் தங்கி இருந்த இல்லத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள் குழுவினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் பேராசிரியர் தங்கியிருந்த இல்லத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் துணை வேந்தரின் மகன் ஓட்டிச்சென்ற கார் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதி சென்றதாகவும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தே குறித்த தாக்குதல் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மாணவர்களால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் அவரது மகன்..! | Student Attack Vice Chancellor Peradeniya Campus

சம்பவத்தில் காயமடைந்திருந்த பேராசிரியார் பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.