கனடாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு
கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்புயல் காரணமாக சில பகுதிகளின் போக்குரத்து முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோ ட்ரான்சிட் மற்றும் ரீ.ரீ.சீ பொதுப்போக்குவரத்து சேவைகள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
காலநிலை சீர்கேடு காரணமாக சில வேளைகளில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பியர்சன் விமான நிலையமும் சீரற்ற காலநிலை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பொழிவு காரணமாக அநேகமான பாதைகள் வழுக்கும் தன்மையுடையவையாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு புறப்படும் முன்னதாகவே விமானப் பயணங்கள் தொடர்பில் அறிந்து கொண்டு புறப்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை