சம்பள விடயத்தில் லொஸ்லியாவை மிஞ்சிய ஜனனி! பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இலங்கை பெண் ஜனனி வெளியேற்றப்பட்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில், வெற்றியாளர் யாரென்று யூகிக்க முடியாத நிலையில், போட்டி நடைபெற்று வருகின்றது.
பிக்பாஸ் சீசன் தற்போது 6வது சென்று கொண்டிருக்கும் நிலையில், 2019ம் ஆண்டில் நடைபெற்ற 3வது சீசனில்இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மற்றும் தர்ஷன் கலந்து கொண்டனர்.
தற்போது இவர்கள் இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று வெளியேறிய ஜனனி லொஸ்லியாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனனி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே அவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டது. ஆனாலும் இந்த வாரம் ஏடிகே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனனி வெளியேறினார்.
கடந்த சில வாரங்களாக ஜனனி அமுதவானனுடன் சேர்ந்து கொண்டு, சுற்றியது ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியதால் குறைந்த வாக்குகள் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் பேசப்பட்டிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த 70 நாட்களுக்கு ரூ.17 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
ஆனால் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான லொஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை