உக்ரைன் மக்களின் மோசமான கிறிஸ்துமஸ் : கண்கலங்க வைக்கும் புகைப்படம் – இணையவாசிகள் உருக்கம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கிட்டதட்ட 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது

அதேநேரம் உக்ரைனும் முடிந்த அளவுக்கு ரஷ்யாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடு கிறிஸ்மஸுக்கு மத்தியில் இயல்பான நிலைக்கு திரும்ப போராடி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் இணையவாசிகளை கண்கலங்க செய்துள்ளது.
ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட இந்த புகைபடத்தில் கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்குகள் எல்லாம் அனைந்து அதில் புறாக்கள் தஞ்சம் புகுந்துள்ளன.

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வித்தியாசம் எனவும் புறாக்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மந்தமான அலங்காரம், மரம் வைக்கப்பட்டுள்ள இருண்ட தெருவும் நாட்டின் ஆதரவற்ற நிலையைப் பறைசாற்றுகின்றன.

இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் உக்ரைனின் மைகோலைவ் நகரில் போரை குறிக்கும் வகையில் கிறிஸ்மஸ் ட்ரீ அமைக்கப்பட்டு இருந்தது, பண்டிகை முடிந்ததும் இதை ரஷ்ய படைகளை எதிர்த்து போராடும் உக்ரைனிய வீரர்களுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.