ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா!

36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின்(Lionel Messi) புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் கோப்பை வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது.

ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா! | Messi S Picture On The Argentine Currency

 

இதற்கு முன்னர் அந்த அணி 1978இ ல் தான் அந்த அணி கோப்பை வென்றிருந்தது. இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது.

கோப்பையுடன் தாயகம் திரும்பிய கேப்டன் மெஸ்சி(Lionel Messi), ஏஞ்சல் டி மரியா(Angel Day Maria) உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டனர்.

வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக வந்தனர். இந்நிலையில், உலக கோப்பையை பெற்று தந்த கேப்டன் மெஸ்சியை(Lionel Messi) கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா கரன்சி நோட்டுகளில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு வங்கி ஆலோசித்து வருகிறது.

ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா! | Messi S Picture On The Argentine Currency

 

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி ஆயிரம் நோட்டு கரன்சியில் மெஸ்சியின் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி(Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.