புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்த பிரதமர் ரிஷி சுனக்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) ஒரு வழியாக தனது புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்துள்ளார். புதிய நெறிமுறை ஆலோசகரை நியமிக்க பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அதிக காலம் எடுத்துக் கொள்வதாக சர்ச்சையை எதிர்கொண்டார்.
இந்த நிலையில் இரண்டு மாத காலத்திற்கு பின், புதிய நெறிமுறை ஆலோசகராக லௌரி மேக்னஸை(Laurie Magnus) பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) நியமித்துள்ளார்.
அவரது நியமனத்தின் விதிமுறைகளின்படி, பிரதமரின் முன் அனுமதி இன்றி அமைச்சர்களின் தவறுகள் குறித்த தனது சொந்த விசாரணைகளை லௌரி மேக்னஸால் (Laurie Magnus) தூண்ட முடியாது.
மேலும், அமைச்சர்கள் விதிகளை மீறியதாக ஆலோசகர் கண்டறிந்தாலும், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பதற்கான இறுதி முடிவை ரிஷி சுனக்(Rishi Sunak) தான் எடுப்பார்.
லௌரி மேக்னஸ்(Laurie Magnus) இங்கிலாந்து வரலாற்று தலைவர் மற்றும் முதலீட்டு வாங்கியாளராக பணியாற்றியவர் ஆவார். 2005 முதல் 2013ஆம் ஆண்டு வரை National Trust-யின் துணைத் தலைவராக பணியாற்றிய லௌரி, அதன் பின்னர் Historic England-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாரம்பரியத்திற்கான சேவைகளுக்காக லௌரி மேக்னஸிற்கு மிக சமீபத்திய புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இருந்து CBE விருது வழங்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு லௌரி இந்த பதவியை வகிப்பார்.
அவருக்கு கீழ் அரசு ஊழியர்களின் குழு பணிபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக்(Rishi Sunak) புதிய ஆலோசகர் லௌரிக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் உங்கள் பணியை பொது சேவையின் சிறந்த மரபுகளில் இருந்து வித்தியாசமாக செய்வீர்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.
மேலும், தான் வழி நடத்தும் அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதே போல் பிரதமருக்கு லௌரி அளித்த பதிலில், ‘அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், நேர்மையுடன் முக்கிய பொறுப்புகளை நிறைவேற்ற நான் முயற்சிப்பேன்’ என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை