சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு!!

சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்நோக்கி வந்தனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு | China Ends Inbound Quarantine

இதன்படி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் இந்த பணிகள் நிறைவடையும் என்று அந்நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த மார்ச் 2020 முதல், சீனாவுக்கு வரும் அனைத்து மக்களையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு | China Ends Inbound Quarantine

சீனா தனது கொரோனா கொள்கைகளை கைவிட்ட பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அண்மையகால நடவடிக்கை இது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், சீனாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா புள்ளிவிபரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.