மீண்டும் விவாகரத்தா? 2வது மனைவியை விட்டு பிரிகிறாரா இயக்குநர் செல்வராகவன் – ரசிகர்கள் அதிர்ச்சி
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் செல்வராகவன். அந்த படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு சமயத்தில் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்”. என இப்படி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், 2வது மனைவியையும் செல்வராகவன் விவாகரத்து செய்ய உள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை