பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இந்து பெண்!
பாகிஸ்தானில் நேற்றைய தினம் (29-12-2022) இந்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 40 வயது பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டர் பக்கத்தில், “40 வயது விதவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டுள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர். பொலிஸ் குழுக்கள் சின்ஜோரோ பகுதிக்கு விரைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜியாலா அமர் லால் பீல், சிதைக்கப்பட்ட உடல் நேற்று வயலில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து பொலிஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் முகத்தில் இருந்து தோல் உரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தப் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை