அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி
இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலக ஊழியர்களினால் இன்று, புத்தாண்டு உறுதிமொழி செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களில் உரம், எரிபொருள் மற்றும் உணவுக்கான நிதியைக் தேடி அந்த அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்துள்ளோம்.
இருப்பினும் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை. 2023ல் இதை அடைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.அரச உத்தியோகத்தர்கள் தமது பணியை வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தாது, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வெற்றிகரமாக செயற்பட வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை ஒரு இயந்திரமாக பார்க்கின்றோம்.
அவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்படவில்லை. அவை ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். அந்த பாகங்களுக்கு இடையே போட்டியோ, இழுபறியோ இருக்க முடியாது.
அவர்கள் தங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது. நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த அனைவரும் கடப்பட்டுள்ளனர்.
இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும்.எனவே அரச பணியாளர்களின் பணி எட்டு மணி நேரம் மட்டும் அல்ல.
இவர்களின் பணி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அல்ல.
கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம். அனைவரின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றார்.
2023 ஆம் ஆண்டானது மிக முக்கியமான ஆண்டாகும். கடன் பிடியிலிருந்து மீள வேண்டும்.
கடன் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதற்காக நாட்டின் அனைத்து சேவையாளர்களும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“100 வருட தீர்மானம்” என்ற அரசாங்கத்தின் தொனிப்பொருளுக்கு அமைய, நாட்டை வளமான பாதைக்கு இட்டும் செல்லும் வகையிலான வேலைத்திட்டத்தை புத்தாண்டில் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களின் சேவையாளர்கள் இன்றைய தினம் உறுதி மொழிகளை ஏற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை