பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) நேற்று பதவியேற்றார்.
பிரசேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.
குறித்த தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர், ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரி கட்சியின் வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டிருந்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கையாண்ட முறைமை, அமேசன் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோவின் அரசாங்கம் அந்த நாட்டு, மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
பிரேசிலின் தேர்தல் நடைமுறைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.
இந்தநிலையில், குறித்த தேர்தலின்போது, முன்னாள் ஜனாதிபதியும் இடதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா, 50.9 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், பிரேசிலுக்கான எங்கள் செய்தி நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பு ஆகும் என தெரிவித்தார்.
அத்துடன், இடதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, கையூட்டல் வழக்கில் முன்னதாக சிறை தண்டனை அனுபவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.