போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இலங்கையில் இருந்து தப்பித்து வந்த போதைப் பொருள் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை