இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும், 10ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில், அதிபருக்கும் தமிழத் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை