80 இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞன்!
ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் அதிகளவில் பணம் செலவு செய்து ஓநாயாக மாறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த இளைஞன் ஆடை அலங்கார நிபுணர் ஒருவரை அணுகி ஓநாயாக மாறுவதற்கான தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆடை அலங்கார நிபுணர் அதிகமாகச் செலவு ஆகும் எனக் கூறியும் ஜப்பான் இளைஞன் சம்மதம் தெரிவித்ததால் வேலைகள் ஆரம்பம் ஆகியது.
50 நாட்களில் வாலிபர் ஓநாய் போல உருமாறுவதற்கான உடைகள் தயாரானது. தயாரான உடைகளை அணிந்து பார்த்ததில் ஜப்பான் இளைஞன் கச்சிதமாக ஓநாய் போலவே கட்சி கொடுத்தார். இதற்காக ஜப்பான் இளைஞன் செலவு செய்த தொகை மட்டும் இலங்கை மதிப்பில் 80 இலட்சம் ரூபாய்களாகும்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சிறு வயதில் இருந்தே விலங்குகளைப் பிடிக்கும். நானும் விலங்குகள் போல் மாறினால் என்ன எனத் தோன்றியது. இதற்காக நான் அணுகிய நிறுவனமும் சிறப்பாக ஆடைகளைத் தயார் செய்து கொடுத்தனர். எனது உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது என்னாலேயே நம்ப முடியவில்லை” எனக் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை