50 வயதில் 60வது குழந்தை! இந்த வயதில் இது தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பாகிஸ்தானை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஜான் முகமது கான் கில்ஜி, மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு 59 குழந்தைகள் இருக்கின்றனர், இந்நிலையில் சமீபத்தில் 60வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும், விரைவில் 4வது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த வயதில் இது தேவையா? என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை