பிரித்தானிய கல்வி திட்டத்தில் மாற்றம் – ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை  பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் கணிதத்திற்கான திட்டங்களைக் கோடிட்டு காட்டியுள்ளார்.

பிரித்தானிய கல்வி திட்டத்தில் மாற்றம் - ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Uk Pm Propose Compulsory Math For Students

இதற்கமைய, 16 முதல் 18 வயது வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கல்வி திட்டத்திற்கமைய கணித பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 18 வயது வரையிலான மாணவர்களின் பாடங்களில் கணிதம் கட்டாயமாக இடம்பெறும் எனவும் இந்த புதிய ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.