ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது.
இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதி நவீன ஹிம்ராஸ் ரக ஏவுதள வாடம் மூலம் அந்த ஏவுகணைகள் வீசப்பட்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலியானதை ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்கள் தொலைபேசிகளை பயன் படுத்தியதால் அதன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.
89 ரஷ்ய வீரர்கள் பலி
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
தொலைபேசி சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்றனர். இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷ்யாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
கருத்துக்களேதுமில்லை