உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா? வியக்க வைக்கும் சில உண்மைகள்
பொதுவாக வாழைப்பழம் என்றாலே அணைவருக்கும் விருப்பமான பழங்களில் ஒன்று. இதில் அதிகமான கால்சியம், வைட்டமின்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர்.
இதன்படி, பப்புவா நியூ கினிஎன்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ளது. இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை மரங்களை “Musa Ingens” எனும் பெயரில் அழைக்கப்பார்கள்.
இந்த பழங்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. இதனை எல்லாம் விட பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது.
மேலும் இந்த வாழை மரங்கள் 15- 30 மீட்டர் வரை வளர்கிறது என்றும் இதிலுள்ள வாழை இலைகள் 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வாழைமரங்களை வீட்டில் வளர்க்க பலர் முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அது பயனற்றதாய் சென்றுவிட்டதாம்… காரணம், இந்த மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளராது.
இதனை தொடர்ந்து இந்த மரங்கள் மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை இருந்தால் மாத்திரமே வளரக்கூடியது.
இதனால் தான் இந்த வாழை மரங்கள்பப்புவா நியூகினி நாட்டில் மட்டும் அதிகமாக விளைகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை