இன்று முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயலி மூலம், விவசாயிகளின் தொலைபேசிகளுக்கு வவுச்சர் படிவம் ஒன்று கிடைக்கப்பெறும். அதனூடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்தொதுக்கப்பட்ட டீசல் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள அறுவடைப் பணிகளுக்காக, இவ்வாறு டீசல் விநியோகிக்கப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை