முற்றிலும் இல்லாதொழிப்பதாக சஜித் வாக்குறுதி

நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதாகக் கொண்டு வரக்கூடிய துறையான இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் நிர்வாகிகள் வாதத்தை முற்றிலும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையானது, இந்த வணிகத்தின் ஊக்குவிப்பாளராகவும், வசதி வழங்குநராகவும் மறுசீரமைக்கப்படும் எனவும், இதற்காக அரசியல் நியமனங்கள் அன்றி, துறைசார் நிபுணர்களைஉள்ளடக்கி, துறைசார் நிபுணர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தேவையான அதிகாரிகள் மற்றும்பதவிகள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து, ஹொங்கொங் போன்ற நாடுகளைப் போல, இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையில் டொலர்களை ஈட்டும் நாடாக நம் நாட்டை மாற்றுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அதேபோன்று, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையும் சமீபகாலமாக பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், அத்துறையின் முன்னேற்றத்திற்கு கடந்த காலங்களில் எதுவும் செய்யப்படாததே இதற்குக் காரணம் ஆகும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினம் மற்றும் ஆபரணக் கொள்கையானது சகல மட்டங்களிலிருந்தும் தகவல்களைப் பெற்று தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இதற்காக பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

FACETS Sri Lanka Premier Edition இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கன்காட்சி இந்நாட்களில் கொழும்புசினமன் கிரன்ட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நேற்று (09) கலந்து கொண்டார். பார்வையிடும்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இவ்வாண்டு முப்பதாவதுமுறையாக இந்த FACETS Sri Lanka கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த FACETS Sri Lanka Premier Edition கண்காட்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சேவை பெறுநர்கள் பங்கேற்பதுடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவிலான சேவைபெறுநர்களும் கலந்து கொள்வார்கள்.

இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண சங்கம் என்பது, இரத்தினக்கல் அகழ்வில் இருந்துஉற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் பொது வர்த்தகம் வரையிலான தொழில்துறையின் உப பிரிவுகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச தனியார் துறை நிறுவனமாகும்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்தே இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் இந்த FACETS Sri Lanka கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.