நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக புதிய திட்டம்
எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இதற்கமைவாக 7 புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. அரச மற்றும் அரச கொள்கை, விவசாய தொழிநுட்பம், கால நிலை மாற்றம் மற்றும் விளையாட்டு தொடர்பாக பல்கலைக் கழகங்களை உருவாக்கும் விடயங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
வரலாறு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாகவும் நிறுவகம் அமைக்கப்பட உள்ளது. புதிய திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பான நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று தெரிவித்த அமைச்சர், இதற்கு மேலதிகமாக மகளிர் மற்றும் ஆலோசனைகள் இதன் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 1,996 வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை