நெருப்போடு விளையாடாதீர்கள் – உலக நாடுகளை எச்சரிக்கும் சீனா

தைவான் சீனாவின் சிறப்பு பிராந்தியம் என சீனா சொல்லிவரும் நிலையில், தைவானோ தன்னை தனிநாடு என்று கூறி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தைவான் தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பலர் தைவானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இது சீனாவிற்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

நெருப்போடு விளையாடாதீர்கள் – உலக நாடுகளை எச்சரிக்கும் சீனா | China Warn World Countries Who Support Taiwan

சமீபத்தில் ஜெர்மனி, லூதியானா நாடுகளின் பிரதிநிதிகள் தைவான் சென்று வந்தனர். இதனால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள சீனாவின் தைவான் விவகார தூதரகம்

“தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், சுதந்திரத்திற்கான சதிகளை அடித்து நொறுக்குவதிலும் சீனா உறுதியாக உள்ளது.

சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்றே சில நாடுகள் தைவானுக்கு ஆதரவளிக்கின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.