விக்னேஷ்வரன்,மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்!!
விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது.
ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையிலேயே விக்னேஷ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
கருத்துக்களேதுமில்லை