உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு-மறுக்கும் முன்னாள் புலிகளின் பிரமுகர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தும் அளவிற்கு பிள்ளையான் மற்றும் எம்மால் முடியாது.இத்தாக்குதல் முயற்சியானது தமிழ் மக்கள் சார்ந்த விடயமாக இருக்குமாயின் சிந்திக்கலாம்.நாங்களும் விடுதலை போராட்டத்தில் இருந்து வெளியேறி வந்தவர்கள்.விடுதலை என்பது தொடர்பில் போராடுகின்ற போதே தெளிவாக நாம் அறிந்துள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார்  தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிள்ளையான் உட்பட பாரதி பங்களிப்பு செய்திருந்தாக பிள்ளையானின் முன்னாள் சகா ஆசாத் மௌலானா வாக்குமூலம் ஒன்று வழங்கியமை தொடர்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தும் அளவிற்கு பிள்ளையான் மற்றும் எம்மால் முடியாது.இத்தாக்குதல் முயற்சியானது தமிழ் மக்கள் சார்ந்த விடயமாக இருக்குமாயின் சிந்திக்கலாம்.நாங்களும் விடுதலை போராட்டத்தில் இருந்து வெளியேறி வந்தவர்கள்.விடுதலை என்பது தொடர்பில் போராடுகின்ற போதே தெளிவாக நாம் அறிந்துள்ளோம்.நாங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுத்தாக்குதலை மேற்கொள்ளும் அளவிற்கு எங்களுடைய செயற்பாடு இருக்காது.நேருக்கு நேர் மோதக்கூடியவர்கள் தான் நாங்கள்.சிலர் இருக்கின்றார்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு புலிக்கொடியை போர்த்திக்கொண்டு வீர வசனங்களை பேசி வருகின்றனர்.அவர்கள்  அந்த நாட்டு அகதி அந்தஸ்து அட்டையை பெறுதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.எனவே தான் எம்மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளவர் மீண்டும் நாட்டிற்கு சென்றால் பிள்ளையான் தன்னை சுடுவார்.பாரதி சுட்டுவிடுவார் என கூறி தயவு செய்து கருணை காட்டுங்கள் என கெஞ்சுகின்றார்.அதாவது அவரது நிரந்திர வதிவிடத்தினை பெற்றுக்கொள்வதற்கு அவரால்  முன்வைக்கப்படும் கருத்தாகவே இக்குற்றச்சாட்டை நான்  பார்க்கின்றேன் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.