ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதன்படி இன்று பிற்பகல் நடைபெறவிருந்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், வாத விவாதங்களின் பின்னர், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
நேற்று கூடிய நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு, தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை