முக்கிய இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- என்ன இப்படி ஆனது?
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய படம் தான் வாரிசு. விஜய் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரான இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.
ரூ. 60 கோடி பட்ஜெட்டில் முதலில் தொடங்கப்பட்ட இப்படம் முடிவதற்குள் ரூ. 80 கோடியை எட்டிவிட்டதாம்.
ஆனால் படத்திற்கான வியாபாரம் எந்த குறையும் இல்லாமல் விஜய்யின் மார்க்கெட்டிற்கு அமோகமாக விற்கப்பட்டது.
தற்போது என்னவென்றால் விஜய்யின் வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு 1.6 மில்லியன் வரை வசூலித்தால் தான் லாபமாம், ஆனால் இதுவரை 1.1 மில்லியன் தான் வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களில் சாதாரண வசூல் கூட வராத என்கின்றனர்.
அதேபோல் Gulf போன்ற இடங்களிலும் துணிவை விட குறைந்த வசூலை தான் வாரிசு பெற்றுள்ளதாம்.
கருத்துக்களேதுமில்லை