1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!
சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,
சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக 800 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாதிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற 75 பேருந்துகள் கிராமப் புற வீதி சேவைகளுக்கு வழங்கவும் சுதந்திர தினத்திற்கு மறுதினம் ( பெப்ரவரி 05) மேலும் 150 பேருந்துகளை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சாரதிகளை மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துக்களேதுமில்லை