யாழ் பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக நாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.