அதிகமாக கொட்டாவி விட்டால் ஆபத்தா? இந்த நோய்க்கான அறிகுறியாம்!
கொட்டாவி வருவதெல்லாம் இயற்கையான விடயம் இதிலென்ன ஆபத்து வரப்போகின்றதென பலர் நினைப்பதுண்டு.
ஆனால் கொட்டாவியால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை எம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும். கொட்டாவியால் ஏற்படும் பிரச்சினை என்னென்ன என்பதை தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை பெரிதாக திறந்து, மூச்சுக்காற்றை வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே நேரத்தில் செவிப்பறை விரிவடைந்து, நுரையீரலில் இருந்து, பெருமூச்சாக, காற்றை வாய்வழியாக வெளி விடுவதுமான செயலாகும். கொட்டாவி எப்போதாவது வந்தால் பிரச்சினையில்லை. அடிக்கடி வந்தால் தான் சந்தேகமான விடயம்.
கொட்டாவிவருவதற்காக உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், நிபுணர்களின் கருத்துப்படி, தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், பதற்றம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், நீரிழப்பு, உடல் வலிகள், சுவாச பிரச்சனைகள்ஆகியவை கொட்டாவி வர காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தால் வலிப்பு அல்லதுகல்லீரல் செயலிழப்பு ஆகிய தீவிர மருத்துவ பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்க வாய்ப்புள்ளது.
மேலும், இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதாக கூறுகின்றனர். அதிலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு கொட்டாவி அதிகம் வரும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
கொட்டாவி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி உடனே பரிசோதித்துக் கொள்ளுங்கள் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- தனிமையை தவிர்த்து எப்போதும் எதாவது ஒரு வேலையை செய்துக் கொண்டே இருங்கள்
- அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்
- அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள்
- போதிய நேரத்தில் தூங்கி எழுதல்
- அதிக உடற்பயிற்சி
- அதிகமாக கொட்டாவி விடுபவர்களின் அருகில் இருக்காதீர்கள்
கருத்துக்களேதுமில்லை