திருவிழா போல களைகட்டிய ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா
ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் மற்றும் ராதிகா சில வருடங்களாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்.
ஆனந்த அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக பணியாற்றினார், இவர் தற்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.
ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் இன்று மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆன்டிலா வீட்டில் நிச்சயதார்த்த விழா நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிச்சயதார்த்த விழாவானது ‘கொல் தானா’ என அழைக்கப்படும் இடத்தில் பிரம்மாண்டமாக நேற்று மாலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிகழ்விற்கு பொலிவூட், மற்றும் கொலிவூட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கலந்துக்கொண்டவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை