உயர்தரப் பரீட்சை காலப்பகுதியிலும் மின்வெட்டு?
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தினமும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கான அதிக செலவு மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான பணத்தை வழங்கினால், மின்வெட்டை மேற்கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்ற அறிவித்தலுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை பதிலளிக்கவில்லை.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை