நுரைச்சோலை முதலாவது இயந்திரம் மீண்டும் இணைப்பு – களனிதிஸ்ஸ செயலிழப்பு

சிறிய பராமரிப்புக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தற்போது முழு கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிலையம் இன்று (22) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது.
மின்சார சபையிடம் போதுமான நெப்தா கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மின்கட்டமைப்பு, 165 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.