சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ்  தலைமையில் நடைபெற்றது.
 
இவ்வருடம் “உன்னத தரத்தை நோக்கிய வீறுநடை என்ற மகுட வாசகத்தை நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒரே குடையின் கீழ் அணிதிரள வேண்டும் எ்னறு கேட்டுக் கொண்டதுடன்  சிறுவர்களின் சுகாதார மேம்பாடு மற்றும் பணிமனையினால் அமுல்ப்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை விடய ஆய்வு ரீதியாக முன்னெடுத்து உத்தியோகத்தர்களின் உச்ச திருப்தியுடனும் பொதுமக்களின் திருப்தியுடனும் சுகாதார நிறுவனங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனும் அடிப்படையில் நீண்ட கலந்துடையால் இடம்பெற்றதுடன் நீண்ட ஆலோசனையும் குறித்த கூட்டத்தின் போது கேட்கப்பட்டது.
 
 மேலும் இக்கூட்டத்தில் பணிப்பாளர் அவர்கள் விடய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளையும் ஆவணப்படுத்துமாறும் அனைவரையும் கேட்டுக் கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்கி வேலைகளை இலகுபடுத்தி உச்ச பயனை அடைவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறும்வேண்டினார்.
 
இதுதவிர நீங்கள் நிறுவன தலைவர்கள் என்கின்ற அடிப்படையில் எவ்வாறான கஷ்டங்களை அனுபவிக்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் என்றும்  தீர்மானிக்கும் சக்தியான நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறித்த கூட்டத்தில் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்ததுடன் ஒவ்வொரு மாதமும் நேரலை தொழில்நுட்ப மூலம் கலந்த ஆலோசனைகளை மேற்கொண்டு  நிறுவனத் தலைவர்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
 
 குறித்த கூட்டத்தில் PSSP திட்டத்தினை சிறப்பாக அமுல்படுத்திய மத்தியமுகாம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் தகவல் சுகாதார முகாமைத்துவப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியினால் ஆவணம் மென் பொருள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.