தமிழர்களது தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில், சமஸ்டி அடிப்படையிலாள தீர்வை அரசு வழங்க வேண்டும்   – சிறீதரன் எம்.பி!!!

தமிழர்களது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை  வழங்க அரசு முன்வரவேண்டும்.   அதைத் தரத்தவறி வெறும்  ஏமாற்று நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முரசுமோட்டை வட்டாரத்தில் நேற்றையதினம் (23) நடைபெற்ற, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் தொடர்பிலான கலந்துரையாடலில் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழர்களுக்கான உரிமைகளைத்  தருவதற்கு சிங்களதேசம் எப்போதும் தயாராக இருந்ததில்லை. தற்போதுள்ள ரணில் அரசும் கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான இன அழிப்புக்களையும்  அடக்குமுறைகளையும் மேற்கொண்டுள்ளது.
அந்த வரலாறுகளைக் கடந்து, தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்க ரணில் அரசாங்கம் முன்வர வேண்டும். மாறாக சர்வதேசத்தையும்  ஏமாற்றி தமிழர்களையும் ஏமாற்றி தங்களுடைய ஆட்சிக்காலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு  இருந்தால் அது பாரிய விளைவையே ஏற்படுத்தும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.