பிப்.15ல் கல்யாணமா – உண்மை உடைத்த அமீர்-பாவனி!
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர். தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி.
இந்நிலையில், இருவரும் பிப்ரவரி 15ல் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள இருவரும், திருமணம் செய்துக்கொள்வோம். ஆனால் இப்போது இல்லை. தற்போதுதான் இருவரும் சேர்ந்து ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை