ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 போ் பலி!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளதால், பேரிடா் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய பல தொண்டு அமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ளன.
இதுவும் கடும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், உதவியின்றி இறந்தாலும் கூட, தங்கள் அமைப்பு எடுத்த முடிவை மாற்றப் போவதில்லை என தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை