இலங்கைக்கு இத்தாலி ஹெலிகொப்டர்!

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இத்தாலி வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.