A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் அனுபவம் வாய்ந்த திறமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் சங்கத்தின் தலைவர் திசர அமரனந்தா தெரிவித்தார்.

ஆனால் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படாமல், வேறு தரப்பினரை அதில் இணைக்கத் தயாரானால் அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களாக பல்வேறு நபர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா இவ்வாறு பதிலளித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.