சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.