கனடா சென்ற மேயர் சரவணபவன் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு !
பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும்.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுவருகின்றது.
தேர்தல் காலம் என்பதாலும், முதல்வர் சரவணபவன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதினாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றதாகவே இருந்துவருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சரவணபவன் கனேடிய தமிழ் சமூகத்தின் அழைப்பில் பேரில் ஒன்டாரியோ மாநகர சபைக்கும் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட சந்திப்புகளை மேற்கொள்ளும் வகையிலும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா என்பவற்றில் கலந்து கொள்ளும் நோக்கில் கனடா நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஜனவரி மாதம் 26 திகதி தான் கனடா செல்வதான கடிதத்தை அவர் 28ம் திகதி பிரதி முதல்வருக்கு வழங்கியதுதான் தற்பொழுது அவர் மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுவருகின்றது.
முதல்வர் சரவனபவான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்பதும், பிரதி முதல்வர் ஒரு டெலோ உறுப்பினர் என்பதுமே பிரச்சனை மேலே கிளம்ப முதன்மைக் காரணம்.
ஜனவரி மாதம் 26 ம் திகதி முதல் பெப்ரவரி 5 வரை முதல்வர் கனடா செல்வதான கடிததத்தை தாமதமாக அறிவித்ததை எதிர்கட்சிகள், முன்னைய கூட்டாளிக்கட்சிகள் தற்பொழுது தூக்கிப்பிடித்து, குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வருகின்றன.
அது மட்டுமல்ல, மாநகரசபைக்குச் சொந்தமான வாகனத்தில் கொழும்பு சென்றறிருந்த சரவணபவான் இரண்டு நாட்கள் கொழும்பில் அந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பதிற்கடமை புரியவேண்டிய பிரதி முதல்வருக்கோ அல்லது மாநகர ஆணையாளருக்கோ உத்தியோகபூர்வமாக அதனை அறிவிக்காதும் தற்பொழுது ஒரு குற்றமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அரசியலில இதெல்லாம் சாதாரணம்தான்.. ஆனால் தேர்தலில் இதுவெல்லாம் மிகப் பெரிய பிரச்சனை..
கருத்துக்களேதுமில்லை