தாய் நாட்டை நேசிப்பவர்கள் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறமாட்டார்கள் – ரணில்!
இலங்கையில் பிறந்து, தாய்நாட்டை நேசிக்கும் எவரும் சுதந்திர தினத்தை கருப்பு தினம் எனக் கூறமாட்டார்கள் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பேரணி தொடர்பில் கருத்துரைக்கும் போதே அதிபர் ரணில் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் நோக்கங்களுக்காக சிலர் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்று கூறுவது துரதிஷ்டவசம் என ரணில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியல் நடத்துபவர்களின் விமர்சனங்களை விட்டுவிட்டு பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒரே உறவுகளாக ஒன்று திரள வேண்டும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை