வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார்- பிமல் ரத்தநாயக்க
வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்தநாயக்க.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட வேட்பாளர் களுக்கிடையிலான சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘யுத்தகாலத்தில் இருந்த நிலைமையை விட தற்போது உள்ள பொருளாதரமை மிகவும் மோசமாக இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வரும் போது குறிப்பிட்டார், தன்னால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று! ஆனால் இந்த எட்டு மாதத்துக்குள் இருந்ததைவிட நாடு கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள், உணவுகளை கொடுக்க முடியாத அரசாங்கம் இன்று 38 கோடி ரூபாய் செலவழித்து சுதந்திர தினத்துக்கு தயாராகிறது.
யுத்தக்காலத்தில் கூட பெறக்கூடியதாக இருந்த தேசிய அடையாள அட்டை இன்று வெறும் தாள்களிலேயே பெறமுடிகிறது. இதைக் கூட செய்ய முடியாத ரணில் விக்ரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகிறார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளின் இவர் விளையாடுகின்றார்.
கருத்துக்களேதுமில்லை