நீதிமன்றில் உறுதியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதானிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யும் உத்தரவை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை