இனத்திற்கும், மதத்திற்கும், மனித நேயத்திற்குமாய் ஒன்றாய் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும்- சஜித்
கடந்த காலங்களில் இனவாதம் மதவாதத்தால் எமது நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா? தகனமா? என பிரச்சினையாக எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்பெரிய கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும், மனித நேயத்திற்குமாய் ஒன்றாய் முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட மொட்டுவுடன் இணைந்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் செயற்பட்டனர் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியில் இவ்வாறான கோழைத்தனமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (31) அக்கரைப்பற்றில் தெரிவித்தார்.
தூய சிங்கள பௌத்தம் ஒருபோதும் இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் செயற்படாதுஎனவும், புத்தர் கூட அனைத்து உயிரினங்களுக்கும் நலவையே நாடி நல்லதையே போதித்தார் எனவும், அந்தக் கோட்பாட்டைப் பின்பற்றும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்களும் அனைத்து இனங்களுக்காகவும் மதங்களுக்காகவும் சரிசமமாக முன்நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை